Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றது-ன்னு பாத்து செய்யுங்க.. கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Karthigai Deepam Special Vella Adai Recipe In Tamil: கார்த்திகை தீப நாளில் மாலை வேளையில் பலகாரம் எதையாவது செய்து தெய்வத்திற்கு படைத்து வழிபாடு செய்து வீடு முழுவதும் தீபங்களை ஏற்றுவோம். அப்படி இந்த ஆண்டின் கார்த்திகை தீப நாளில் சற்று வித்தியாசமான பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் கார்த்திகை வெல்ல அடை செய்யுங்கள். இந்த வெல்ல அடை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது ஆறிப் போனாலும் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வெல்ல அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வெல்ல அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* வெல்லம் - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வதக்கியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு ஆகியவற்றை எடுத்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, குறைந்தது 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 3 மணிநேரம் கழித்து நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் வெல்லம், உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து, ரவா பதத்திற்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும், துருவிய
தேங்காயை பொன்னிறமாக வதக்கி இறக்கி, அரைத்ததுடன் சேர்த்து, நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி அரைத்ததை
கொஞ்சம் எடுத்து உருட்டி இலையில் வைத்து, தட்டையாக தட்டி, நடுவே
துளையிட வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள அடையை போட்டு, மிதமான தீயில்
வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் அடையாக தட்டிப் போட்டு எடுத்தால்,
சுவையான கார்த்திகை வெல்ல அடை தயார்.



Click it and Unblock the Notifications