Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வெல்ல சீடை ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்...!
Karthigai Deepam Special Inippu Seedai Recipe In Tamil: தமிழ்நாட்டின் முக்கியமான விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபம். விழாக்கள் என்றாலே பலகாரங்கள் இல்லாமல் எப்படி கொண்டாடுவது? எனவே கார்த்திகை தீபத்தின் போதும் வீட்டில் சில பலகாரங்களை அவசியம் செய்ய வேண்டும். வெல்ல சீடை என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது தயாரிக்கப்படும் பலகாரங்களில் முக்கியமானதாகும்.
இந்த வெல்ல சீடை செய்வதற்கு எளிதானது மற்றும் இதை பல நாட்கள் வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வெல்ல சீடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்த்திகை தீபம் ஸ்பெஷல் வெல்ல சீடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- அரை கப் உடைத்த வெல்லம்
- 1 டீஸ்பூன் எள்
- 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
- ¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- வறுக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
- ஒரு கடாயை சூடாக்கி, அரிசி மாவை குறைந்த தீயில் ஓரிரு நிமிடங்கள் வறுக்கவும். அரிசி மாவு தீய்ந்து போகும் அளவிற்கு வறுக்க வேண்டாம்.
- வறுத்த அரிசி மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். அரிசி மாவு ஈரமாக இருந்தால் சீடை வெடித்து விடும், எனவே நன்கு வறுக்க வேண்டும்.
- பின்னர் அதே கடாயில் எள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இந்த வறுத்த எள் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை அரிசி மாவுடன் சேர்க்கவும். பின்னர் வெண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் உடைத்த வெல்லத்தை போட்டு, வெல்லத்தை ஊற வைக்க தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் எந்தவித அசுத்தமும் இல்லமல் வடிகட்டிக் கொள்ளவும்.
- வடிகட்டிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- இந்த வெல்லப்பாகை அரிசி மாவுடன் சேர்த்து, அரிசி மாவை ஒரு கரண்டி நன்றாகக் கலக்கவும். மாவை சரியான பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு தளர்வாகவும் மென்மையாகவும் இருந்தால், சூடான எண்ணெயில் போடும்போது உடைந்துவிடும்.
- இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சூடான எண்ணெயில் போடுவதற்கு முன் சில நிமிடங்கள் மின்விசிறிக்கு கீழ் வைக்கவும்.
- சீடையை வறுக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் போதுமான அளவு சூடானதும், ஒரு சீடை உருண்டைய எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். சீடை உடையவில்லை என்றால் மாவு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
- பின்னர் ஒரே கட்டமாக 4-5 சீடை உருண்டைகளை எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாகவும், பழுப்பு நிறமாகவும் மாறும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.
- மொறுமொறுப்பான சீடையை அடுப்பிலிருந்து எடுத்து, எண்ணெயை வடிகட்ட ஒரு பேப்பரில் வைக்கவும்.
- சுவையான மற்றும் மொறுமொறுப்பான வெல்ல சீடை நெய்வேத்தியம் செய்ய தயாராக உள்ளது.



Click it and Unblock the Notifications