Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சளி, இருமலில் இருந்து விடுபட கற்பூரவள்ளி இலை வெச்சு இப்படி ரசம் செஞ்சு குடிங்க.. டக்குன்னு சரியாயிடும்....
Karpooravalli Rasam Recipe In Tamil: தற்போது பனி அதிகம் கொட்டுவதால், நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சளி, இருமலுக்கு நிறைய மருந்து மாத்திரைகளை எடுப்பது மட்டுமின்றி, சளியை வெளியேற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒருசில மூலிகைகளை எடுத்து வந்தால், சளி விரைவில் முறிந்துவிடும். அதுவும் சளியை முறிப்பதில் கற்பூரவள்ளி இலை மிகவும் சிறந்தது.
கை வைத்தியத்தில் இந்த கற்பூரவள்ளி இலையின் சாறு சளிக்காக பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இதன் சாற்றினை குடிக்க பிடிக்காவிட்டால், அந்த கற்பூரவள்ளி இலையைக் கொண்டு ரசம் வைத்து சாப்பிட்டால், சளி விரைவில் சரியாகும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி இலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி இலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கற்பூரவள்ளி இலை - 10-15
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6- பல்
* தக்காளி - 6-7
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி,
கற்பூரவள்ளி இலை, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கற்பூரவள்ளி இலை விழுதை
சேர்த்து, 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, நுரைக்கட்டும் வரை
கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கற்பூரவள்ளி
இலை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications