Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Karnataka Style Mutton Saaru Recipe in Tamil: ஒருவழியாக புரட்டாசி முடிந்துவிட்டது. ஒரு மாதமாக அசைவ உணவுகளின் பக்கம் செல்லாமல் இருந்தவர்கள் வெறித்தனமாக சிக்கன், மட்டன், மீன் என சாப்பிட ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் இந்த வருடம் ஐப்பசி மாதம் ஞாயிறுக் கிழமையே வருவதால் அனைவரும் நாளை கறிக்கடைகளில் படையெடுக்கப் போகிறார்கள். இந்த வாரம் மட்டன் வாங்கப் போறீங்களா? அப்படினா வழக்கமான மட்டன் குழம்பு செய்யாம கர்நாடகா ஸ்டைலில் மட்டன் சாறு வைச்சு பாருங்க.

இந்த கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பின் ஸ்பெஷலே அதற்காக தனியாக அரைக்கப்படும் மசாலாதான். இந்த மட்டன் சாறு சாதத்துடன் மட்டுமின்றி இட்லி. தோசை. சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களை இந்த குழம்பு செய்து அசத்துங்கள். கர்நாடகாவில் இந்த மட்டன் குழம்பு மிகவும் பிரபலமானதாகும்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் மட்டன் சாறு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா மட்டன் சாறு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி - ½ கிலோ
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
தக்காளி - 2
பச்சை மிளகாய்கள் - 8
கல் உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ½ மூடி
மசாலா அரைக்க:
மிளகாய் - 4
குண்டூர் மிளகாய் - 4
கொத்தமல்லி விதைகள் (தனியா) - 1.5 டீ ஸ்பூன்
கடலை எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கிராம்பு - 6
பட்டை - ½ இன்ச் அளவு
பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 7 பல்
இஞ்சி - 2 இன்ச் அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
- முதலில் மட்டன் துண்டுகளை இரண்டு முறை அலசி, பின் சிறிதளவு
மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி எடுத்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து
கொள்ளவும்.
- வெங்காயத்தின் மீது கருப்பு நிற பூஞ்சை இல்லாமல் சுத்தமாக கழுவி
எடுத்து நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய பின் வெங்காயம் ½ கப் அளவிற்கு இருக்க வேண்டும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி சுத்தம் செய்து பொடியாக
நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் சேர்த்து மண் இல்லாமல் அலசி எடுத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகாய் மற்றும் கொத்தமல்லி
விதைகளை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.
- அதே வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சூடாக விடவும்.,
- பின் அதில் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கவும்.
- கடைசியாக அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து சில
நிமிடங்கள் வதக்கி, ஆற வைக்கவும்.
- நன்கு ஆறியதும் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை
நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி விட்டு இரண்டாக கீறி எடுத்து
கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- பின் கறிவேப்பிலை மற்றும் ஆட்டிறைச்சியைச் சேர்த்து ஒரு நிமிடம்
வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து
கிளறவும்.
- பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- கீறி வைத்த பச்சை மிளகாயை குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு
உப்பு சேர்க்கவும்.
- மட்டன் வேக தேவையான அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்து குக்கரை
மூடி மிதமான தீயில் ½ மணி நேரம் வேக விடவும்.
- குக்கரின் விசிலை கணக்கில் கொள்ளாமல், அரை மணி நேரம் வேக விட
வேண்டும். அதற்கு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- ½ மணி நேரத்திற்கு பின், குக்கரில் உள்ள பிரஷர் தானாக அடங்கும் வரை
வைத்திருக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பப்படி எடுத்து
கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து
அரைத்து ½ கப் அளவிற்கு பால் எடுத்து கொள்ளவும்.
- பின் குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து அதனுடன் அரைத்து எடுத்து
வைத்த தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வரும் வரை இரண்டு
நிமிடங்களுக்கு வைத்து அடுப்பை அணைக்கவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் சுவையான கர்நாடக பாணி மட்டன்
சாரு ரெடி!
- இது சூடான சாதம், இட்லி, தோசை அல்லது ராகி களியுடன் சேர்த்து
சாப்பிட சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
