Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பு
இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய போகிறீர்களா? அந்த மட்டனைக் கொண்டு வித்தியாசமான ஸ்டைலில் குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த வாரம் கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பை செய்யுங்கள்.
இந்த மட்டன் குழம்பு நன்கு காரசாரமாக கண்ணைக் கவரும் நிறத்தில் இருப்பதோடு, அற்புதமான சுவையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* குண்டூர் வரமிளகாய் - 4
* மல்லி விதைகள் - 1 1/2 டீஸ்பூன்
* கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 6
* பட்டை - 1/2 இன்ச்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* கொத்தமல்லி - சிறிது
பிற பொருட்கள்...
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1/2 கிலோ
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 10
* கல் உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காஷ்மீரி மற்றும்
குண்டூர் வரமிளகாய், மல்லி விதைகளை சேர்த்து நன்கு மணம் வரம் வரை
வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, வெஙகாயம்,
பூண்டு, இஞ்சி சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மட்டனை கழுவிப் போட்டு ஒரு நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த
மசாலாவை சேர்த்து பிரட்டி, 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, பச்சை
மிளகாயை முழுதாக சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, 1/2 மணிநேரம் மட்டனை வேக
வைக்க வேண்டும். விசிலை கணக்கில் கொள்ள வேண்டாம். ஆனால் அரை மணிநேரம்
மட்டனை வேக வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, விசில் போனதும்
குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி, மீண்டும் அந்த குக்கரை
அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
கர்நாடகா ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications