Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
5 மிளகாயும், 1/2 கப் தயிரும் இருந்தா இந்த கர்நாடகா தயிர் சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...
Karnataka Style Curd Chutney Recipe in Tamil: பெரும்பாலும் உங்கள் வீட்டில் காலை அல்லது மாலையில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? இட்லி, தோசைக்கு மிகவும் எளிதான மற்றும் அதேசமயம் சுவையான சைடிஷ் என்றால் அது சட்னிதான். எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா?
அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் தயிர் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு மிளகாய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த சட்னியில் மல்லி விதை, எள், தயிர் போன்ற வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்துவமானதாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.

உங்களுக்கு கர்நாடகா ஃபேமஸ் தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஃபேமஸ் தயிர் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 5 வர மிளகாய்
- 2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 2 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் என்
- அரை ஸ்பூன் கடுகு
- அரை கப் தயிர்
- 3 பல் பூண்டு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் கடுகு
செய்முறை:
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி வாரமிளகாயை போட்டு வறுக்கவும்.
- மிளகாய் வதங்கியதும், உளுத்தம்பருப்பு மற்றும் கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து, உளுத்தம்பருப்பு சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் எள் மற்றும் கடுகு சேர்த்து, கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் வரை வதக்கவும்.
- பின்னர் பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- இது ஆறும் வரை காத்திருந்து, பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாடியில் போட்டு கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.
- பின்னர் அதில் அரை கப் தயிரை சேர்த்து அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். இந்த சட்னியை தாளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் தாளித்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்பூன் போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி மீது கொட்டி கிளறினால் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
