Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெண்டைக்காயை இந்த மாதிரி கர்நாடகா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு டெஸ்ட் சும்மா அள்ளும்...!
Karnataka Special Vendakkai Chutney Recipe in Tamil: வெண்டைக்காயை வைத்து பொதுவாக சாம்பார் அல்லது புளிகுழம்புதான் செய்வோம். ஆனால் உண்மையில் வெண்டைக்காயை வைத்து பல சூப்பரான உணவுகளை செய்யலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் வெண்டைக்காய் சட்னி. இந்த வெண்டைக்காய் சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.
இன்று இரவு அல்லது காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? ஆம் எனில், மேலே சொல்ல கர்நாடகா ஸ்பெஷல் வெண்டைக்காய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த சுவையான வெண்டைக்காய் சட்னியை அரைப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பொடியை அரைக்க வேண்டும். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த சட்னி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு கர்நாடகா செப்சல் வெண்டைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கிலோ வெண்டைக்காய்
- 1 தக்காளி
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் வெல்லம்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
பொடிக்கு அரைக்க தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் தனியா விதைகள்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- வெந்தயம் சிறிதளவு
- அரை ஸ்பூன் கடுகு
- 4 வர மிளகாய்
தாளிக்க:
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கொத்தமல்லி, சீரகம், வெந்தயம், கடுகு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து பருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை மசாலாப் பொருட்களை வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- அதே கடாயில், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து, 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி, புளி, வெல்லம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும்.
- வறுத்த பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு மிக்ஸி ஜாடியில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதில் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.
- இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீதி கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் வெண்டைக்காய் சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications