Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
கர்நாடகா ஸ்பெஷல் உச்செலு சட்னி... இந்த சட்னியை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Karnataka Special Uchellu Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி சசெய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொஞ்சம் எள் உள்ளதா?
இதுவரை நீங்கள் எள்ளை முறுக்கு அல்லது வேறு நொறுக்குத்தீனிகளில் சேர்த்துதான் சாப்பிட்டிருப்போம். அந்த எள்ளை வைத்து சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், இன்று அதை முயற்சி செய்து பாருங்கள். இந்த உச்செலு சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு உச்செலு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உச்செலு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 3 ஸ்பூன் எள் விதைகள்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 3 வரமிளகாய்
- 2 முதல் 3 பல் பூண்டு
- 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
- 1 சிட்டிகை சர்க்கரை
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 வர மிளகாய்
செய்முறை:
- உச்செலு சட்னி செய்ய, முதலில் எள் விதைகளை ஒரு கடாயில் மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும். எள் ஒருபோதும் தீய்ந்து விடக்கூடாது, இல்லையெனில் சட்னி கசந்து விடும்.
- சட்னியில் போட்டு அரைப்பதற்கு முன்பு சிறிது நேரம் குளிர்விக்க வாணலியை ஒதுக்கி வைக்கவும்.
- பின்னர் மிக்சியில் துருவிய தேங்காய், பூண்டு, வரமிளகாய், கொத்தமல்லி, சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
- பின்னர் வறுத்த எள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாகத்தான் இருக்க வேண்டும். எனவே சிறிது தண்ணீர் மட்டும் சேர்க்கவும்.
- மிக்ஸியில் இருக்கும் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயை குறைந்த தீயில் வைத்து ஓரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் , கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயைச் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டினால் உச்செலு சட்னி ரெடி.
- இந்த உச்செலு சட்னி கர்நாடகாவில் பிரபல உணவுகளாக இருக்கும் அக்கி ரொட்டி, ஜோவர் ரொட்டி போன்றவற்றுடனும் நம்முடைய இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications