Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
கர்நாடகா ஃபேமஸ் மைசூர் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Karnataka Special Mysore Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? மேலும் அவ்வப்போது சற்று வித்தியாசமான ரசத்தையும் செய்து சாப்பிடுவீர்களா? நீங்கள் கர்நாடகா ஸ்டைல் மைசூர் ரசம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ரசத்தை உங்கள் வீட்டில் செய்துள்ளீர்களா?
இல்லையென்றால், அடுத்தமுறை அந்த மைசூர் ரசத்தை செய்யுங்கள். இந்த ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த ரசத்தை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த ரசத்தை செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் மைசூர் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
ரசத்திற்கு...
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து கரைத்துக்
கொள்ளவும்)
* தக்காளி - 2
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து
அரைப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை
சேர்த்து, அத்துடன் மல்லி, சீரகம், மிளகு, துவரம் பருப்பு, வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு புளியை நீரில் ஊற வைத்து, கைகளால் பிசைந்து வடிகட்டி சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த புளிச்சாற்றுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கைகளால் ஒருமுறை பிசைந்து, பின் அந்த
பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து லேசாக மசித்து வைத்துள்ள துவரம்
பருப்பு, அரைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் கொத்தமல்லியைத்
தூவி மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசம் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
ரசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான மைசூர் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











