Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கர்நாடகா ஸ்டைல் கோலார் சட்னி ரெசிபி... இந்த சட்னி இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியை விட சூப்பராக இருக்கும்...!
Karnataka Kolar Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி சாம்பார் தான். என்ன செய்யலாம் என்ன செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பலருக்கு மன அழுத்தமே வந்துவிடும் போல. என்ன செய்வது கடைசியில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் ஏதாவது ஒரு சட்னி செய்வோம். முன்னெல்லாம் பக்கத்து வீட்டில் சிறிது குழம்பு சட்னி வாங்கி வந்து சாப்பிடுவோம்.
இப்போது பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என தெரிந்து வைத்திருப்பதே பெரிது. இட்லி, தோசைக்கு புதிய சட்னி செய்ய ஆசைப்பட்டா இந்த கோலார் சட்னியை தாராளமா ட்ரை பண்ணலாம். சரி கோலார் தங்கத்திற்கு மட்டும் பேமஸ் இல்ல, சட்னிக்கும் பேமஸ் தான். வாங்க கர்நாடகா ஸ்பெஷல் கோலார் சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- தக்காளி - 1
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- வரமிளகாய் - 5-7(காரத்திற்கு ஏற்ப)
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும்.
- முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய்
சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் வேர்க்கடலை சேர்த்து - நன்றாக சிவக்கும் வரை வறுத்து
கொள்ளவும்.
- பொன்னிறமாக வறுபட்ட கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை தனியாக ஒரு
பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும்.
- கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் 5 வெள்ளை பூண்டு சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வரும் போது அரை தேக்கரண்டி சீரகம்
சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை, மற்றும் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து
கிளறிவிடவும்.
- பின் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கினால்
போதுமானது.
- பின் அடுப்பை அணைத்து வதக்கியவற்றை ஆற விடவும்.
- அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த பொருட்களை சேர்த்து தேவையான
அளவு உப்பு மற்றும் இடையிடையே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து
கொள்ளவும்.
- அதே கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாகவ வறுக்கவும்.
- அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த சட்னி
சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கோலார் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications