Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்
Karnataka Kempu Chutney Recipe in Tamil: பெரும்பாலும் உங்கள் வீட்டில் காலை அல்லது இரவில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? இட்லி, தோசைக்கு மிகவும் எளிதான மற்றும் அதேசமயம் சுவையான சைடிஷ் என்றால் அது சட்னிதான். எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் கெம்பு சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு மிளகாய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த சட்னியில் சீரகம், வெல்லம் போன்ற வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்துவமானதாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.
உங்களுக்கு கர்நாடகா ஃபேமஸ் கெம்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா கெம்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 வர மிளகாய்
- 10 சின்ன வெங்காயம் (தோராயமாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் வெல்லம்
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- ½ ஸ்பூன் சீரகம்
- சிறிதளவு கொத்தமல்லி
- 5 பூண்டுப் பல்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
செய்முறை:
- ஒரு சிறிய பாத்திரத்தில் போதுமான அளவு நீர் சேர்த்து அதில் வர மிளகாயை போட்டு கொதிக்க விடவும்.
- பின்னர் பாத்திரத்தை மூடி, மிளகாய்கள் மென்மையாகும் வரை பத்து நிமிடங்களுக்கு அப்படியே தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, தோராயமாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில், வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி அடுப்பை அணைத்து வெங்காயத்தை ஆற விடவும்.
- ஒரு மிக்சி ஜாரில், ஊறவைத்த வர மிளகாய், வதக்கிய வெங்காயம், 5 பூண்டு பல், நறுக்கிய 2 கொத்தமல்லி இலைகள், 1 ஸ்பூன் புளிக்கரைசல், 2 ஸ்பூன் வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- முதலில் தண்ணீர் சேர்க்காமல் சட்னியை அரைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அது நன்கு காய்ந்ததும் ¼ ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- உடனடியாக அதை சட்னியுடன் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கெம்பு சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
