Latest Updates
-
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்!
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
Karnataka Karpooravalli Tambuli Recipe in Tamil: தற்போது சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நம் உணவுகளில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். காய்ச்சல், சளி போன்றவற்றை விரட்டும் எளிய ஆரோக்கிய பொருட்களில் ஒன்றுதான் கற்பூரவல்லி இலை. கற்பூரவல்லி இலையை பொதுவாக மக்கள் விரும்ப மாட்டார்கள், அதற்கு காரணம் அதன் மணமும், காரமான சுவையும்தான். ஆனால் கற்பூரவல்லி இலையை வைத்தே சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சைடிஷை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

கர்நாடகா ஸ்டைலில் கற்பூரவல்லி இலையை வைத்து ஒரு சூப்பரான தம்பிலியை செய்யலாம். தம்பிலி என்பது கர்நாடகாவில் குறிப்பாக உடுப்பியில் மிகவும் பிரபலமான ஒரு சைடிஷாகும். இந்த தம்புலியை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். தம்பிலியை பல காய்கறிகளை வைத்து செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது ஆரோக்கியமான கற்பூரவல்லி தம்புலி.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா கற்பூரவல்லி தம்பிலி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கெட்டியான மோர்
- தேவையான அளவு உப்பு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் சீரகம்
- 4 மோர் மிளகாய்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
வறுத்து அரைப்பதற்கு:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 10 கற்பூரவல்லி இலைகள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 பச்சை மிளகாய்
- 1 மேசைக்கரண்டி தேங்காய்
செய்முறை:
- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்
- பின்னர் கற்பூரவல்லி இலைகளைக் கழுவிச் சேர்க்கவும். இலைகள் சற்று சுருங்கும் வரை வதக்கவும்..
- அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- இதனுடன் 1 ஸ்பூன் தேங்காய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். இதை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 கப் கெட்டியான மோரை எடுத்துக் கொள்ளவும்.
- அதை நன்கு கடைந்து அதனுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- அரைத்து வைத்துள்ள விழுதை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் மோர் மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- கடுகு வெடித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
- இந்த தாளிப்பை மோர்கலவையில் ஊற்றி நன்கு கிளறினால் சுவையான கற்பூரவல்லி தம்பிலி ரெடி!



Click it and Unblock the Notifications
