Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கர்நாடகா ஸ்பெஷல் வறுத்த பூண்டு மிளகாய் சட்னி...இந்த சட்னியை செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Karnataka Garlic Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி சசெய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் வறுத்த பூண்டு சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு மிளகாய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த வறுத்த பூண்டு சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வறுத்த பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 முழு பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 இன்ச் புளி
- 1 ஸ்பூன் சமையல் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் பூண்டை உரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை சூடாக்கி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் வர மிளகாயை போட்டு வதக்கவும்.
- மிளகாய் வதங்கியதும், நறுக்கிய பூண்டைச் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.
- பூண்டு சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும். அதிகமாக வதக்க வேண்டாம்.
- ஒரு மிக்சி ஜாரை வதக்கிய பொருட்களை போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்க்கவும்.
- பின்னர் புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான பேஸ்டாக அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வர மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இந்த தாளிப்பை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கிளறினால் கர்நாடகா பேமஸ் வறுத்த பூண்டு சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications