Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காராமணி பொரியல்
பொரியல் இல்லாமல் சிலருக்கு சாப்பாடே இறங்காது. உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து சுவைத்து போரடித்திருந்தால், காராமணி பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
பொரியல் இல்லாமல் சிலருக்கு சாப்பாடே இறங்காது. உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து சுவைத்து போரடித்திருந்தால், காராமணி பொரியல் செய்து சாப்பிடுங்கள். காராமணி என்பது மிகவும் நீளமாக பீன்ஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட காய்கறி. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. ஆனால் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், எடையை இழக்க நினைப்போருக்கு ஏற்ற காய்கறி. இந்த காய்கறியை பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு காராமணி பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காராமணி பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காராமணி - 300 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பொடியாக நறுக்கிய காராமணி பீன்ஸ் சேர்த்து, உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள காராமணி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சில நொடிகள் நன்கு கிளறிவிடுங்கள்.
* பின்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காராமணி பொரியல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications