Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
சாதத்துடன் சாப்பிட அட்டகாசமா இருக்கும்... காரைக்குடி கீரை கூட்டு
Karaikudi Keerai Kootu: இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று கீரை கூட்டு செய்யுங்கள்.
அதுவும் காரைக்குடி ஸ்டைலில் கீரை கூட்டு செய்யுங்கள். இந்த கீரை கூட்டு புளிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி, வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

வாரம் 1-2 முறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் கீரை உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. உங்களுக்கு காரைக்குடி கீரை கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே காரைக்குடி கீரை கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்டுக் கீரை - 2 சிறிய கட்டு
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சக்கரை - 1 சிட்டிகை
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - அரைக்க தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் தண்டுக் கீரையை சுத்தம் செய்து, 2 முறை நீரில் நன்கு
கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழுவிய கீரையை
நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில்
போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் அரிசி மாவை சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள்,
சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும்
நறுக்கிய கீரையை சேர்த்து அடுப்பில் வைத்து, கீரையை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து
சேர்த்து கிளற வேண்டும்.
* அடுத்து, அதில் அரைத்து தேங்காயை சேர்த்து கிளறி, கொதிக்க வைத்து
இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து
தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி இறக்கி, கீரையுடன்
சேர்த்து கிளறினால், சுவையான காரைக்குடி கீரை கூட்டு தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications