Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
காரைக்குடி கீரை கடையல் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சாதத்தில் போட்டு சாப்பிட அருமையா இருக்கும்...!
Karaikudi Keerai Kadayal Recipe in Tamil: ஆரோக்கியமான உணவுகளில் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது கீரைகள்தான். அதிலும் முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முளைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று கீரை கடையல் செய்யுங்க. அதுவும் காரைக்குடி ஸ்டைலில் கீரை கடையல் செய்யுங்கள். இந்த கீரை கூட்டு புளிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி, வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

வாரம் 1-2 முறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் கீரை உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. உங்களுக்கு காரைக்குடி கீரை கடையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கீரை கடையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- துவரம்பருப்பு - ஒரு கப்
- தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - ஒரு ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவிட்டு குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும். அதேசமயம் கீரையைப் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, வர மிளகாய் ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இந்த கலவை ஆறியதும் கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த கலவையை கீரையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கீரையில் கொட்டி நன்கு கலக்கவும்.
- இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். இந்த காரைக்குடி கீரை கடையலை முளைக்கீரை மட்டுமின்றி அனைத்து கீரைகளிலும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications