Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
கத்திரிக்காயை இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் மசியல் பண்ணுங்க... பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Karaikudi Kathirikai Masiyal Recipe in Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று சுவையான, அதே சமயம் வித்தியாசமான ஒரு சைடிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்தரிக்காயும், பெரிய வெங்காயமும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்தே ஒரு அட்டகாசமான சுவையில் ஒரு மசியல் செய்யலாம்.
இந்த காரைக்குடி கத்திரிக்காய் மசியல் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். சொல்லப்போனால், இந்த சைடிஷ்ஷை செய்தால், வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த மாதிரி கத்தரிக்காய் செய்து கொடுத்தால் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் இந்த மாதிரியான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதோடு பேச்சுலர்களும் இதை முயற்சி செய்யலாம்.

உங்களுக்கு காரைக்குடி ஸ்டைலில் கத்திரிக்காய் மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கத்திரிக்காய் மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
- கத்தரிக்காய் - 3
- வர மிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- கத்தரிக்காய்களை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும். பெரிய வெங்காயம், தக்காளி. மல்லித்தழை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளுடன் உப்பு சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் இறுதியில் வர மிளகாய், மல்லித்தழை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.
- இந்த கலவை நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து மசியலில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
- சுவையான காரைக்குடி கத்தரிக்காய் மசியல் ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











