Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
காரைக்குடி காரக் குழம்பு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... ஒரு வாரம் வைச்சு சாப்பிடுவீங்க...!
Karaikudi Kara Kulambu Recipe in Tamil: சாம்பாருக்கு அடுத்தப் படியாக பெரும்பாலான வீடுகளில் வைப்பது கார குழம்புதான். ஒரே மாதிரியாக கார குழம்பு வைத்து போரடித்து விட்டதா? ஆம் எனில், அப்படியே செட்டிநாடு ஸ்டைலில் காரக் குழம்பு வைக்க முயற்சி செய்யுங்கள். இந்த செட்டிநாடு ஸ்டைல் காரக் குழம்பு சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. சூடான சாதத்துடன் இந்த குழம்பை சேர்த்து சாப்பிட வேற லெவலில் இருக்கும்.
இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம். பொதுவாக காரக் குழம்பு என்றாலே வெண்டைக்காய், கத்தரிக்காய்தான் பிராதான காய்கறிகளாக இருக்கும். ஆனால் இந்த செட்டிநாடு ஸ்டைல் குழம்பில் நீங்கள் வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை கூட சேர்த்து செய்யலாம்.

உங்களுக்கு எளிதான மற்றும் சுவையான காரைக்குடி ஸ்டைல் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்துங்க.
தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் - 1 கப்
- சின்ன வெங்காயம் - 20
- வெண்டக்காய் - 200 கிராம்
- பச்சை மிளகாய் - 4
- கத்திரிக்காய் - 2
- தக்காளி - 2
-மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- கறிவேப்பிலை - 2 கொத்து
- மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
- புளி கரைசல் - அரை கப்
- கடுகு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு தேங்காயை துருவி வைத்து கொள்ள வேண்டும் மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் துருவிய தேங்காய் 10 சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், மல்லி,சிறிது தேங்காய் எண்ணெய் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- பின் சிறிது மஞ்சள் தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
- நன்கு ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்தத்து நைசாக அரைத்து எடுக்கவும்.
- வீட்டில் மண் சட்டி இருந்தால் அதில் குழம்பை வைக்கவும், இல்லையெனில் ஒரு கடாயை பயன்படுத்தவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெந்தயம் சேர்க்கவும்
- பின் சின்ன வெங்காயம் பூண்டு கத்திரிக்காய் வெண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
- பிறகு அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் புளி கரைசல் தக்காளி கீறிய பச்சை மிளகாய் உப்பு தண்ணீர் சேரத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்தால் சுவையான காரைக்குடி கார குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications