Latest Updates
-
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம்
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த காரைக்குடி கார சட்னியை ட்ரை பண்ணுங்க.. சுவை அள்ளும்..
Karaikudi Kara Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? தினமும் காலையில் சைடு டிஷ் முடிவு செய்வதே பெரிய வேலையா இருக்கா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரே சட்னியை செய்தால் மிகவும் குறைவாகவே சாப்பிடுகிறார்களா? இன்று நீங்கள் இதுவரை செய்திராத ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காரைக்குடி கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று ஒரு சட்னி செய்ய நினைத்தால், இந்த சட்னியை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 10-15 பல்
* புளி - சிறு எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 20
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 10-15 பல் பூண்டு, புளி, 4-5 வரமிளகாய்
மற்றும் 20 சின்ன வெங்காயத்தை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த 2 தக்காளியை துண்டுகளாக்கி
போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வாணலியில் உள்ள வெங்காயத்துடன் அரைத்த தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு 2 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காரைக்குடி கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications