Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1/2 கிலோ சிக்கன் இருந்தா இந்த 'காரைக்குடி' ஸ்பெஷல் சிக்கன் சுக்காவை செய்யுங்க... டேஸ்ட் தரமா இருக்கும்...!
Karaikudi Chicken Sukka Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கப் போறீங்களா? அந்த சிக்கனை வைத்து வழக்கமான குருமா அல்லது வறுவலாக செய்வதற்குப் பதிலாக சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த காரைக்குடி சிக்கன் சுக்காவை செய்யுங்கள். இந்த காரைக்குடி சிக்கன் சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த காரைக்குடி சிக்கன் சுக்காவானது பிரியாணி மட்டுமின்றி சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இந்த சிக்கன் சுக்காவிற்கு ஒரு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். ஒருமுறை இந்த சிக்கன் சுக்காவை செய்தால், பின் அடிக்கடி வீட்டில் உள்ளோர் செய்ய சொல்வார்கள். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரைக்குடி சிக்கன் சுக்காவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெந்தயம் - கால் ஸ்பூன்.
- பட்டை - 2
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 2
- மிளகு - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம்- 1 டீஸ்பூன்
- மராட்டி மொக்கு - 2
- அன்னாசிப்பூ - 1
- கல்பாசி - சிறிதளவு
- தனியா 3 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது)
- தக்காளி - 250 கிராம் (நறுக்கியது).
- மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- கடாயை அடுப்பில் வைத்து தனியா, வர மிளகாய், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, கல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
- அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு குழைந்து அனைத்தும் நன்கு கலந்து திக்காக மாறும்வரை வதக்கவும்.
- இப்போது நன்கு கழுவி சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து பின்னர் அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறவும்..
- பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு பொடித்து வைத்துள்ள செட்டிநாடு மசாலாவை மூன்று ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
- இறுதியாக மசாலா நன்கு திக்கானதும் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் சூப்பரான காரைக்குடி சிக்கன் சுக்கா ரெடி.
- இந்த செட்டிநாடு சிக்கன் சுக்கா வறுவல் அனைத்து சாதத்திற்கும் அருமையான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











