Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும் கார பூண்டு சட்னி!
இன்று உங்கள் வீட்டில் இட்லி செய்வதாக இருந்து, அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், கார பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி 5 நிமிடத்தில் தயாரிக்கும் அளவில் எளிதான செய்முறையைக் கொண்டது.
பூண்டு சத்துக்கள் அதிகம் நிறைந்த மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வருவதன் மூலம், பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை சீராக்குகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது, இதய நோயைத் தடுக்கிறது, உடலை சுத்தம் செய்கிறது, சளியைத் தடுக்கிறது, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய பூண்டை தினந்தோறும் பலவாறு உணவில் சேர்க்கலாம்.

முக்கியமாக இன்று உங்கள் வீட்டில் இட்லி செய்வதாக இருந்து, அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், கார பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த கார பூண்டு சட்னி 5 நிமிடத்தில் தயாரிக்கும் அளவில் எளிதான செய்முறையைக் கொண்டது. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றும் பேச்சுலர்களுக்கு காலையில் செய்ய ஏற்ற ஒரு ஈஸியான சைடு டிஷ். உங்களுக்கு கார பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 10 பல்
* காஷ்மீரி மிளகாய் - 8
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பூண்டு பற்களை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வதக்கிய வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது, அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொண்டால், கார பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: crunchykitchen



Click it and Unblock the Notifications
