Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
2 முட்டை இருந்தா.. இப்படி ஆம்லெட் செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க...
Kara Muttai Omelette Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ஆம்லெட் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் ஆம்லெட் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி ஆம்லெட் செய்வதற்கு பதிலாக, அவ்வப்போது மற்ற வெரைட்டி ஆம்லெட்டுகளையும் ட்ரை செய்து பாருங்கள். அதில் ஒன்று தான் கார முட்டை ஆம்லெட்.
இந்த ஆம்லெட் நன்கு காரசாரமாக இருக்கும். மேலும் இதை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். ஒருவேளை உங்களுக்கு சிம்பிளாக காலை உணவு அல்லது டின்னரை முடிக்க வேண்டுமென்று தோன்றினால், அப்போது 2 முட்டை இருந்தால், அதைக் கொண்டு இந்த கார முட்டை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு கார முட்டை ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார முட்டை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கார மசாலாவிற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில்
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு சிறிய பேனை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய 2 பல் பூண்டு மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத்
தூள், சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில்
வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு மசாலாவை தவாவில் அப்படியே பரப்பி விட்டு, அதன் மேல் அடித்து
வைத்துள்ள முட்டையை ஊற்றி பரப்பி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான
தீயில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, முட்டையைத் திருப்பிப் போட்டு
எடுத்தால், சுவையான கார முட்டை ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications