Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
காந்தாரி சிக்கன் குழம்பு
இந்த வார விடுமுறையில் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் காந்தாரி சிக்கன் குழம்பு செய்யுங்கள்.
இந்த வார விடுமுறையில் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் காந்தாரி சிக்கன் குழம்பு செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பு சப்பாத்தி, சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இந்த சிக்கன் குழம்பில் மிகவும் காரமான காந்தாரி மிளகாய் சேர்க்கப்படுவதால், இந்த குழம்பு சற்று காரமாக இருக்கும். கார உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, இந்த குழம்பு சரியான தேர்வாக இருக்கும்.

உங்களுக்கு காந்தாரி சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காந்தாரி சிக்கன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்படடுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* தேங்காய் எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3/4 கப் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* காந்தாரி மிளகாய் - 10 (தட்டிக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சுடுநீர் - 1/2 கப்
* முந்திரி - 6-8 (நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், 2-3 காந்தாரி மிளகாய், சிறிது உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நசுக்கிய காந்தாரி மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1-2 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி, சுடுநீரை ஊற்றி கிளறி, சிக்கனை குறைவான தீயில் 25-30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்தது, கரம் மசாலா, முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி, சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications

