Latest Updates
-
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்!
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. அசத்தலான கல்யாண வீட்டு பால் பாயாசத்தை செய்யலாம்.. எப்படின்னு பாருங்க...
Kalyana Veetu Paal Payasam Recipe In Tamil: மகாளய அமாவாசை என்பதால் பலரும் தங்கள் வீடுகளில் முன்னோர்களுக்கு படைக்க வடை, பாயாசத்துடன் சமைப்பார்கள். நீங்கள் இன்று நல்ல சுவையான ஒரு பாசாயம் செய்ய நினைக்கிறீர்களா?
அதுவும் வழக்கமாக செய்யக்கூடிய பாயாசத்தை செய்யாமல் சற்று வித்தியாசமான பாயாசத்தை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கல்யாண வீட்டு பால் பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு வெறும் 3 பொருட்கள் போதும். மிகவும் சுலபமாக செய்துவிடலாம்.

உங்களுக்கு கல்யாண வீட்டு பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு பால் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1 1/2 லிட்டர்
* பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 150 கிராம்
செய்முறை:
* முதலில் குக்கரை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் பச்சரிசியை நீரில் இரண்டு முறை கழுவி விட்டு, 20 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, நீரை முற்றிலும் வடிகட்டி விட வேண்டும். பின்
அதை மிக்சர் ஜாரில் போட்டு, ஒன்றிரண்டாக லேசாக ஒருமுறை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 லிட்டர் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பாலை
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து கலந்து,
பின் அதில் ஒரு சுத்தமான சிறிய தட்டை அப்படியே உள்ளே வைக்க வேண்டும்.
இப்படி வைக்கும் போது, பால் அடியில் பிடிக்காமல் இருக்கும்.
* பின் குக்கரை மூடி, குறைவான தீயில் வைத்து, 20 நிமிடம் வேக வைத்து
இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, மீண்டும் குக்கரை
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி மீண்டும் 20 நிமிடம் குறைவான தீயில்
வைத்து வேக வைக்க வேண்டும்.
* 20 நிமிடத்திற்கு பின் குக்கரைத் திறந்தால், மணமணக்கும் அசல் கல்யாண
வீட்டு பால் பாயாசம் தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications