Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
ஈவ்னிங் டைம்-ல வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைச்சா.. இந்த கல்மாஸை செய்யுங்க.. டக்கரா இருக்கும்...
Kalmas Recipe In Tamil: விடுமுறை நாட்களில் தான் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலை வேளையில் காபி, டீ குடிப்போம். அப்படி குடிக்கும் போது, ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து சாப்பிட தோன்றும். அப்போது எப்போதும் செய்வது போன்று பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால், கல்மாஸ் செய்யுங்கள்.
கல்மாஸ் என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான பப்ஸ் போன்ற ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. ஆனால் இதன் மேல் லேயர் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும். இருப்பினும், இந்த கல்மாஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை கல்மாஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கல்மாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 2 (நீளவாக்கில் 4 துண்டுகளாக்கிக்
கொள்ளவும்)
மேல் மாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1
* அரிசி மாவு/இடியாப்ப மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - 1 1/4 கப்
பொரிப்பதற்கு...
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த 2 முட்டைகளை எடுத்து, அவற்றை நீளவாக்கில் வெட்டி 8
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், சின்ன வெங்காயத்தை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு/இடியாப்ப மாவை எடுத்து, அத்துடன்
அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கைகளால்
நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்பு நன்கு கொதிக்கும் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி,
கரண்டியால் கிளறி, கைப்பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்த பிசைந்த மாவை 8 உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின்
ஒரு உருண்டையை எடுத்து, அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே வதக்கிய
வெங்காய மசாலாவை வைத்து, அதன் பின் ஒரு முட்டை துண்டையும் வைத்து
கொழுக்கட்டை போன்று மடித்து மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று
அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இந்த கொழுக்கட்டைகளை வைத்து,
இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும்
சிறிது நீரை ஊற்றி சற்று நீராக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதில்
போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகாய் தூள் கலவையில் பிரட்டிய கொழுக்கட்டைகளைப்
போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான முட்டை கல்மாஸ் தயார்.
Image Courtesy: Her Delicacies



Click it and Unblock the Notifications