For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

Posted By: suganthi rajalingam
|

விரதங்களின் போது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சமயங்களில் நிறைய ஸ்பெஷல் உணவுகளையும் தயாரித்து கடவுளுக்கு படைத்து மகிழ்வார்கள். அஷ்டமி பூஜை செய்து அஷ்டமிக்கு பிரசாதத்தை படைப்பார்கள். எனவே நவராத்திரி என்றாலே அதன் ஸ்பெஷல் ரெசிபிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் இந்த கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி நவராத்திரிக்கென்றே செய்யக் கூடிய ஒன்று. அப்படியே அதில் சேர்க்கப்படும் நெய்யின் மணமும் வாசனையும் நம் நாவை எச்சு ஊறச் செய்து விடும். விரத ரெசிபி என்பதால் ராக் சால்ட் மட்டும் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யப்படுகிறது. புரோட்டீன், தாதுக்கள் அடங்கிய இந்த ரெசிபி நமது உடலுக்கும் நல்லது.

சரி வாங்க இப்பொழுது இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

Black Chana Recipe
கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி / சித்திர பிரசாதம் ஸ்பெஷல் காலா சென்னா ரெசிபி /காலா சென்னா மசாலா ரெசிபி/காலா சென்னா செய்முறை விளக்கம் /காலா சென்னா வீடியோ ரெசிபி
கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி / சித்திர பிரசாதம் ஸ்பெஷல் காலா சென்னா ரெசிபி /காலா சென்னா மசாலா ரெசிபி/காலா சென்னா செய்முறை விளக்கம் /காலா சென்னா வீடியோ ரெசிபி
Prep Time
5 Mins
Cook Time
25M
Total Time
30 Mins

Recipe By: அங்கிதா மிஸ்ரா

Recipe Type: சைடிஸ்

Serves: 2

Ingredients
  • கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    ராக் சால்ட் - 1 டீ ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    கருப்பு கொண்டைக்கடலை - 2 கப்

    மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • கருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.

    இப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்

    இப்பொழுது ராக் சால்ட், சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

    பிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்

    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும்

    தண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்

    இதை ஒரு பெளலிற்கு மாற்றி பூரியுடன் பரிமாறுங்கள்.

    சுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி

Instructions
  • நீங்கள் கொண்டைக்கடலையை இரவிலே ஊற வைத்து விட்டால் வேக வைக்கும் போது சீக்கிரம் வேகும்
  • கூடுதல் சுவை வேண்டும் என்று நினைத்தால் தனியா தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்(150 கிராம்)
  • கலோரிகள் - 110
  • கொழுப்பு - 2.8 கிராம்
  • புரோட்டீன் - 4.7 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 17.5 கிராம்
  • நார்ச்சத்து - 5.3 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் :காலா சென்னா செய்வது எப்படி

கருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.

இப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்

இப்பொழுது ராக் சால்ட், சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

பிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்

கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும்

தண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்

இதை ஒரு பெளலிற்கு மாற்றி பூரியுடன் பரிமாறுங்கள்.

சுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி

[ 5 of 5 - 68 Users]
Read more about: recipes
English summary

Kala chana Masala Recipe

For the auspicious occasion of Navratri Chaitra, people all across the country, especially at the northern part of India, hold fasts or vrats to show their immense devotion for their beloved deity. For the Ashtami Puja, people usually cook Kala Chana, Suji ke Halwa and Puri as a prasad and these Navratri recipes are delicious and filling.
Desktop Bottom Promotion