Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... முந்திரி பட்டர் மசாலா
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? சற்று வித்தியாசமான, அதே வேளையில் ஈஸியாக செய்யக்கூடியவாறான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முந்திரி பட்டர் மசாலா செய்து கொடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோரு இரவு எப்போதும் சப்பாத்தியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? சற்று வித்தியாசமான, அதே வேளையில் ஈஸியாக செய்யக்கூடியவாறான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முந்திரி பட்டர் மசாலா செய்து கொடுங்கள். இந்த ரெசிபியானது ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்றே அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முந்திரி பட்டர் மசாலா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முந்திரி பட்டர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முந்திரி பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 1 கப்
* தக்காளி - 4
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தக்காளியைப் போட்டு, தோல் சுருங்கும் வரை தக்காளியை வேக வைத்து இறக்கி குளிர வைத்து, தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், மீதமுள்ள முந்திரியைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பிரியாணி இலை மேற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளி முந்திரி விழுதை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 3 கப் நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்த முந்திரி, கரம் மசாலா சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கசூரி மெத்தியை கையால் நசுக்கி மேலே தூவினால், சுவையான முந்திரி பட்டர் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
