For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி பண்டிகையில் பூசணிக்காய் கரி செய்வது எப்படி செய்வது என பார்க்கலாமா?

பூசணிக்காய் ரெசிபி இந்தியாவில் பரவலாக பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது செய்யப்படும் விரத உணவாகும். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

Posted By: Suganthi R
|

கட்டு கி சப்ஜி ரெசிபி எனப்படும் பூசணிக்காய் கறி இந்தியாவில் பரவலாக பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது செய்யப்படும் விரத உணவாகும். இந்த ரெசிபியை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் அவரவர் ஸ்டைலில் இதைச் செய்து மகிழ்வர். நீங்கள் பூசணிக்காயை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இந்த ரெசிபி உங்கள் நாவிற்கும் வயிற்றிற்கும் விருந்தளிக்கும்.

இந்த பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அப்படியே காரசாரமான மசாலா பொருட்களை வைத்து சமைத்தால் போதும் நாவின் சுவைக்கு எல்லையே இல்லை எனலாம். ஒரு துண்டு பீத் ஹி சப்ஷி ரெசிபியை அப்படியே கடித்தால் பூசணிக்காயின் இனிப்பு சுவையும் காரசாரமான மசாலா சுவையும் உங்கள் நாக்கில் மட்டுமல்ல உங்கள் மனதிலும் அதன் சுவை ஒட்டிக் கொள்ளும்.

இந்த ரெசிபி சுவை நிறைந்தததாக மட்டுமில்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த ரெசிபியை விரைவாகவும் ரெம்ப கஷ்டப்படாமல் எளிதாக நீங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் நீங்கள் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது.

சரி வாங்க இந்த பூசணிக்காய் கரி ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

கட்டு கி சப்ஷி ரெசிபி வீடியோ

kaddu ki sabzi recipe
ரெசிபி கார்டு 1-கட்டு ஹி சப்ஷி ரெசிபி /பூசணிக்காய் கரி செய்வது எப்படி /பீத் ஹி சப்ஷி ரெசிபி /பீத் ரெசிபி /கட்டா மீத்தே கட்டு ரெசிபி
ரெசிபி கார்டு 2-கட்டு ஹி சப்ஷி ரெசிபி /பூசணிக்காய் கரி செய்வது எப்படி /பீத் ஹி சப்ஷி ரெசிபி /பீத் ரெசிபி /கட்டா மீத்தே கட்டு ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
15M
Total Time
25 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: சைடிஸ்

Serves: 4

Ingredients
  • பூசணிக்காய் -250 கிராம்

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயம் தூள் - கொஞ்சம்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    வெந்தயம் - 3 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

    படிக உப்பு (ராக் சால்ட்) - சுவைக்கு

    மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    மல்லித் தூள் (தனியா பவுடர்) - 2 டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

    சுகர் - 2 டேபிள் ஸ்பூன்

    மாங்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் (நறுக்கியது) - - 1/2 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)- 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. பூசணிக்காயில் உள்ள விதைகளை எல்லாம் முதலில் எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    2. பிறகு அதன் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

    4. அதனுடன் பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்க்க வேண்டும்

    5. அதனுடன் வெந்தயம் போட்டு நன்றாக வதக்கவும்.

    6. இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் சிறு துண்டுகளான பூசணிக்காய் போன்றவற்றை போட வேண்டும்.

    7. நன்றாக கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்

    8. கொஞ்சம் படிக உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

    9. மூடியை கொண்டு மூடி விட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

    10. பிறகு மூடியை திறந்து கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்

    11. இப்பொழுது மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்க்கவும்

    12. அதனுடன் கரம் மசாலா மற்றும் சுகர் சேர்க்கவும்

    13. நன்றாக கிளறி மறுபடியும் மூடியால் மூடி விட வேண்டும்

    14. 5-7 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்

    15. பிறகு மூடியை திறந்து மாங்காய் பொடி சேர்க்க வேண்டும்

    16. இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்

    17. அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

Instructions
  • 1. சாதாரண உப்பையும் ராக் சால்ட்டுக்கு பதிலாக பயன்படுத்தலாம். ஆனால் விரதத்திற்கு தயாரிக்கும் போது ராக் சால்ட் பயன்படுத்த வேண்டும். 2. சுகருக்கு பதிலாக வெல்லம் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். வித்தியாசமான சுவையை தரும்.
  • 3. எடுத்த பூசணிக்காய் விதைகளை காய வைத்து வறுத்து தானியத்துடனோ அல்லது சாலட்டுடனோ சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 56
  • கொழுப்பு - 2 கிராம்
  • புரோட்டீன் - 2 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 11 கிராம்
  • சுகர் - 6 கிராம்
  • நார்ச்சத்து - 2 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் : கட்டு ஹி சப்ஷி ரெசிபி செய்வது எப்படி

1. பூசணிக்காயில் உள்ள விதைகளை எல்லாம் முதலில் எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2. பிறகு அதன் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

4. அதனுடன் பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்க்க வேண்டும்

5. அதனுடன் வெந்தயம் போட்டு நன்றாக வதக்கவும்.

6. இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் சிறு துண்டுகளான பூசணிக்காய் போன்றவற்றை போட வேண்டும்.

7. நன்றாக கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்

8. கொஞ்சம் படிக உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

9. மூடியை கொண்டு மூடி விட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

10. பிறகு மூடியை திறந்து கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்

11. இப்பொழுது மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்க்கவும்

12. அதனுடன் கரம் மசாலா மற்றும் சுகர் சேர்க்கவும்

13. நன்றாக கிளறி மறுபடியும் மூடியால் மூடி விட வேண்டும்

14. 5-7 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்

15. பிறகு மூடியை திறந்து மாங்காய் பொடி சேர்க்க வேண்டும்

16. இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்

17. அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

[ 4 of 5 - 87 Users]
English summary

Kaddu Ki Sabzi Recipe | Dry Pumpkin Curry | Pethe Ki Sabzi Recipe

Kaddu Ki Sabzi Recipe | Dry Pumpkin Curry | Pethe Ki Sabzi Recipe
Story first published: Monday, September 11, 2017, 18:06 [IST]
Desktop Bottom Promotion