Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Jeeraga Kuzhambu Recipe : சீரக குழம்பு
உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான குழம்பு செய்யுங்கள்.
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான குழம்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு சீரக குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீரக குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் சாம்பார் பவுடர் சேர்த்து நன்கு கிளறி, புளி சாற்றினை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து பச்சை வாசனை போனதும், அரைத்த சீரக பொடியைத் தூவி கிளறி, மீண்டும் ஒரு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சீரக குழம்பு தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications
