Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மொறு மொறுப்பான... ஜவ்வரிசி வடை
Javvarisi Vadai: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? இன்று என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா?
அப்படியானால் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஜவ்வரிசி வடை செய்து கொடுங்கள். இந்த ஜவ்வரிசி வடைக்கு ஜவ்வரிசியை சிறிது ஊற வைக்க வேண்டும். மற்றபடி இந்த வடையை செய்வது மிகவும் சுலபம்.

முக்கியமாக இந்த ஜவ்வரிசி வடை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு ஜவ்வரிசி வடை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே ஜவ்வரிசி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
* வேர்க்கடலை - 3/4 கப்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை கழுவி, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி
வைத்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க
வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை
நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப் போட்டு
வறுத்து இறக்கி, தோலுரித்து விட்டு, மிக்சர் ஜாரில் போட்டு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு மசித்த உருளைக்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை பொடி, பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தட்டையாக
தட்டி ஒரு தட்டில் வைத்து, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும்
மொறுமொறுப்பான ஜவ்வரிசி வடை தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications