Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
1/2 கப் ஜவ்வரிசியும், 3/4 லிட்டர் பாலும் இருந்தா.. ஒருவாட்டி இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. அடிக்கடி செய்வீங்க
Javvarisi Rasgulla Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடைகளில் ஸ்வீட் வாங்கி சாப்பிடுவீர்களா? அதுவும் உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் ரசகுல்லா என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த ரசகுல்லாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் 1/2 கப் ஜவ்வரிசியும், 3/4 லிட்டர் பாலையும் கொண்டு அட்டகாசமான சுவையில் செய்யலாம். இப்படி ஒருமுறை இந்த ரசகுல்லாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த ரசகுல்லாவை செய்தால், வீட்டில் வந்திருக்கும் விருந்தினர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு ஜவ்வரிசி ரசகுல்லாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி ரசகுல்லா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* சோள மாவு - 1/4 கப்
* பால் பவுடர் - 1/2 கப்
ரசகுல்லாவிற்கு...
* பால் - 3/4 லிட்டர்
* பால் பவுடர் - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் - 2 (பொடித்தது)
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* பாதாம், பிஸ்தா - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் ஜவ்வரிசியை எடுத்து, நீரில் 2-3 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஜவ்வரிசி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, மிக்சர்
ஜாரில் ஜவ்வரிசியை சேர்த்து, அத்துடன் சோள மாவு மற்றும் பால் பவுடரை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து கையில் எண்ணெய் அல்லது நெய்யை தடவி, அரைத்ததை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில்
கெட்டியான பாலை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பால் பவுடரை சேர்த்து,
கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க தொடங்கியதும், அதில் உருட்டி வைத்துள்ள
உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து, 7-8 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* உருண்டைகளானது மேலே மிதக்க தொடங்கும் வரை, கரண்டியை பயன்படுத்த
வேண்டாம். இல்லாவிட்டால், உருண்டைகள் உடைந்துவிடும்.
* உருண்டைகள் பாலில் மிதக்கத் தொடங்கியதும், கரண்டியால் ஒருமுறை
கிளறி, பின் அதில் சர்க்கரை மற்றும் பொடித்து வைத்துள்ள ஏலக்காயை
சேர்த்து கிளறி, உயர் தீயில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து கிளறி இறக்கி,
மேலே பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவினால், சுவையான
ஜவ்வரிசி ரசகுல்லா தயார். இந்த ரசகுல்லாவை சூடாகவோ அல்லது குளிர
வைத்தோ பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications