Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
சன்டே ஸ்பெஷல்: ருசியான... ஜப்பானீஸ் சிக்கன் டெரியாக்கி
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு ஜப்பானீஸ் சிக்கன் ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்கள். அது தான் சிக்கன் டெரியாக்கி.
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு ஜப்பானீஸ் சிக்கன் ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்கள். அது தான் சிக்கன் டெரியாக்கி. இந்த ஜப்பானீஸ் சிக்கன் ரெசிபி ஒரு நல்ல ஸ்டாட்டர் மற்றும் இதை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம். இந்த ரெசிபி புளிப்பு மற்றும் இனிப்பு கலந்து இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஜப்பானீஸ் சிக்கன் டெரியாக்கி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜப்பானீஸ் சிக்கன் டெரியாக்கி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* ஸ்பிரிங் ஆனியன் (பச்சை பகுதி) - சிறிது
* வெள்ளை எள்ளு விதைகள் - சிறிது
ஊற வைப்பதற்கு...
* ஆரஞ்சு ஜூஸ் - 1 1/2 கப்
* லைட் சோயா சாஸ் - 1/4 கப்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூஸ், சோயா சாஸ், தேன், இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சிக்கனைப் போட்டு கலந்து, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனை மட்டும் எடுத்து போட்டு வதக்கி, 5-7 நிமிடம் சிக்கனை வேக வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன் ஊற வைத்த எஞ்சிய ஆரஞ்சு ஜூஸ் கலவையை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
* பின்பு அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் எள்ளு விதைகள் மற்றும் ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சுவையான ஜப்பானீஸ் சிக்கன் டெரியாக்கி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications