For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி?

ஜிலேபி வட இந்தியர்களின் முக்கிய இனிப்பு வகையாக இருந்தால் கூட இதன் சுவையால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீட்டிலேயே ஜிலேபி செய்வதை பார்க்க போகிறோம்.

Posted By: Lekhaka
|

ஜிலேபி என்பது வட இந்தியர்களின் முக்கிய இனிப்பு வகையாக இருந்தால் கூட இதன் சுவையால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர். இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இதை சர்க்கரை பாகுவில் ஊற வைப்பதால் இந்த ஜூஸின் தன்மை இதுக்கு கிடைக்கிறது.

கடைகளில் விற்பனைக்காக செய்யப்படுகின்ற ஜிலேபி ரெசிபியை பார்த்தால் குறைந்தது 6-8மணி நேரமாவது ஆகும். ஆனால் உடனடியாக வீட்டிலேயே ஜிலேபி செய்வதை எப்படி என்பதைத் தான் நாம் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

இந்த வீட்டிலேயே தயாரிக்கும் ரெசிபியும் உங்களுக்கு அருமையான சுவையை கொடுக்கும். உங்களுக்கு ஜிலேபிக்கு புளிப்பு சுவை வேண்டும் என்று நினைத்தால் மாவில் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இங்கே லெமன் ஜூஸ் பயன்படுத்த போவதில்லை.

இந்த ஜிலேபி ரெசிபி ரெம்ப சுவையான எளிதான ரெசிபி ஆகும். இதற்கு நீங்கள் சர்க்கரை பாகுவை சரியான பதத்தில் காய்ச்சினாலே போதும் பாதி வேலை முடிந்து விடும். சரி வாங்க இப்பொழுது குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Jalebi Recipe
ஜிலேபி ரெசிபி /துரிதமான முறையில் வீட்டிலேயே ஜிலேபி செய்வது எப்படி /ஹோம்மேடு ஜிலேபி ரெசிபி /துரிதமான ஜிலேபி ரெசிபி
ஜிலேபி ரெசிபி /துரிதமான முறையில் வீட்டிலேயே ஜிலேபி செய்வது எப்படி /ஹோம்மேடு ஜிலேபி ரெசிபி /துரிதமான ஜிலேபி ரெசிபி
Prep Time
15 Mins
Cook Time
25M
Total Time
40 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 10-12 ஜிலேபி

Ingredients
  • மைதா - 1 கப்

    கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    தண்ணீர் - 4 கப்கள்

    குங்குமப் பூ - 4-5

    பழ உப்பு - தேவைக்கேற்ப

    குங்குமப் பூ கலர் பொடி - கொஞ்சம்

    நெய் - 1 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
    1. மைதா மாவை கலக்குவதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்
    2. அதனுடன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்க்கவும்
    3. நன்றாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலக்கவும். மாவானது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
    4. இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
    5. அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
    6. அதனுடன் உடனடியாக தண்ணீர் ஊற்றி கருகுவதை தவிர்க்கவும்.
    7. சர்க்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சி 3-5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
    8. குங்குமப் பூ மற்றும் கலர் பொடியை அதனுடன் சேர்க்கவும்
    9. மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கி ஓரமாக வைத்து விடவும்
    10. இப்பொழுது கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் பழ உப்பு சேர்த்து கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
    11. ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதன் மூடியை திறந்து கொண்டு அதன் மேல் ஒரு புனலை வைக்க வேண்டும்.
    12. அந்த புனலின் வழியாக மாவை செலுத்த வேண்டும். பிறகு ஒரு துளையிட்ட மூடியால் மூடி விட வேண்டும்.
    13. இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நெய் ஊற்றி உருகியதும் ஒரு 1-2 நிமிடங்கள் சூடாக வேண்டும்.
    14. இப்பொழுது துளையிட்ட டப்பாவை மேலே பிடித்து கொண்டு சூடான நெய்யில் மாவை பிழிய வேண்டும்.
    15. சுத்து முறுக்கு வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி பிழிய வேண்டும்.
    16. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்.
    17. இந்த செய்முறை முடிந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.
    18. பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுவில் 30 விநாடிகள் ஊற வைக்க வேண்டும்.
    19. பிறகு அதை எடுத்து வைத்து சர்க்கரை பாகு சொட்ட சொட்ட பரிமாறுங்கள்.
Instructions
  • 1. தயிர் புளிப்பாக இருக்க கூடாது.
  • 2. 6-7 மணி நேரம் மாவை வைத்தால் புளித்து விடும்.
  • 3. உடனடியாக புளிப்பு சுவை தேவைப்பட்டால் மாவுடன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள்
  • 4. மைதாவின் அளவும் சர்க்கரை பாகுவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவும் சமமாக இருக்க வேண்டும்.
  • 5. பழ உப்பு சேர்ப்பதால் ஜிலேபி நல்லா புஷ் என்று எம்பி வரும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 ஜிலேபி
  • கலோரிகள் - 310 கலோரிகள்
  • கொழுப்பு - 10 கிராம்
  • புரோட்டீன் - 2 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 54 கிராம்
  • சர்க்கரை - 20 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : ஜிலேபி செய்வது எப்படி

1. மைதா மாவை கலக்குவதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும் .

2. அதனுடன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்க்கவும் .

3. நன்றாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலக்கவும். மாவானது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

4. இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

5. அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

6. அதனுடன் உடனடியாக தண்ணீர் ஊற்றி கருகுவதை தவிர்க்கவும்.

7. சர்க்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சி 3-5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

8. குங்குமப் பூ மற்றும் கலர் பொடியை அதனுடன் சேர்க்கவும்.

9. மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கி ஓரமாக வைத்து விடவும் .

10. இப்பொழுது கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் பழ உப்பு சேர்த்து கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

11. ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதன் மூடியை திறந்து கொண்டு அதன் மேல் ஒரு புனலை வைக்க வேண்டும்.

12. அந்த புனலின் வழியாக மாவை செலுத்த வேண்டும். பிறகு ஒரு துளையிட்ட மூடியால் மூடி விட வேண்டும்.

13. இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நெய் ஊற்றி உருகியதும் ஒரு 1-2 நிமிடங்கள் சூடாக வேண்டும்.

14. இப்பொழுது துளையிட்ட டப்பாவை மேலே பிடித்து கொண்டு சூடான நெய்யில் மாவை பிழிய வேண்டும்.

15. சுத்து முறுக்கு வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி பிழிய வேண்டும்.

16. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்.

17. இந்த செய்முறை முடிந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

18. பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுவில் 30 விநாடிகள் ஊற வைக்க வேண்டும்.

19. பிறகு அதை எடுத்து வைத்து சர்க்கரை பாகு சொட்ட சொட்ட பரிமாறுங்கள்.

[ 3.5 of 5 - 78 Users]
English summary

Jalebi Recipe | How To Make Instant Jalebi At Home | Homemade Jalebi Recipe | Instant Jalebi Recipe

Jalebi Recipe | How To Make Instant Jalebi At Home | Homemade Jalebi Recipe | Instant Jalebi Recipe
Desktop Bottom Promotion