Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சீசன் இருக்கும் போதே பலாப்பழத்தை வாங்கி ஒருவாட்டி இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டுக்கு அடிமையாயிடுவீங்க...
Jackfruit Poli Recipe In Tamil: தற்போது பலாப்பழ சீசன் என்பதால் மார்கெட்டுகளில் விலைக் குறைவில் பலாப்பழம் விற்கப்படுவதைக் காணலாம். நீங்கள் பலாப்பழ பிரியர் என்றால், அதை வெறுமனே சாப்பிடாமல், அதைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களை ட்ரை செய்து சுவைத்து பாருங்கள்.
அதுவும் பலாப்பழத்தைக் கொண்டு போளி செய்து ஒருமுறை சாப்பிட்டால், பின் ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் இந்த பலாப்பழ போளியை செய்து சாப்பிடுவீர்கள். அந்த அளவில் இந்த போளி ருசியாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு இப்படி பலாப்பழத்தை செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். ஒருவேளை பலாப்பழம் இனிப்பாக இல்லாமல் இருந்தால், அப்போது அதை தூக்கிப் போடாமல், அதைக் கொண்டு இப்படி போளி செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு பலாப்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாப்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பலாப்பழம் - 1/4 கிலோ
* தேங்காய் - 1 மூடி (துருவியது)
* நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* உப்பு - 1 சிட்டிகை
மேல் மாவிற்கு...
* மைதா - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பலாப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்ழுன் நெய் ஊற்றி
சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பலாப்பழத்தை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் இனிப்பு சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரையையோ அல்லது
வெல்லத்தையோ சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* கலவையானது அல்வா போன்று திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதாவை எடுத்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தீயைக்
குறைத்து, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி மெல்லிய
தோசையாக சுற்றி, முன்னும் பின்னும் வெந்ததும், அதில் பலாப்பழ கலவையை
சிறிது வைத்து மடித்து, 1 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
பலாப்பழ போளி தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் கொண்டு போளி
செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications