Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பலாப்பழத்தை வாங்குனா அப்படியே சாப்பிடாம.. ஒருடைம் இப்படி பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க...
Jackfruit Paniyaram Recipe In Tamil: தற்போது பலாப்பழ சீசன் என்பதால் மார்கெட்டுகளில் பலாப்பழம் விலைக்குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். நீங்கள் பலாப்பழ பிரியர் என்றால், அதுவும் அடிக்கடி பலாப்பழத்தை வாங்கி சாப்பிடுபவரானால், அடுத்தமுறை அந்த பலாப்பழத்தை வெறுமனே சாப்பிடாமல், ஒருமுறை அவற்றைக் கொண்டு மாலை வேளையில் பணியாரம் செய்து சாப்பிடுங்கள்.
இந்த பலாப்பழ பணியாரமானது பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்நாக்ஸாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பலாப்பழ பணியாரம் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

உங்களுக்கு பலாப்பழ பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாப்பழ பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பலாப்பழம் - 10 துண்டுகள்
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பலாப்பழ துண்டுகளில் உள்ள விதைகளை நீக்கிவிட
வேண்டும்.
* பின்னர் அந்த பலாப்பழ துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக
அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் அரைத்த பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் ரவை
மற்றும் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து, 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, தயாரித்து வைத்துள்ள மாவை நன்கு கிளறி, ஆப்ப
சோடாவை சேர்த்து மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ கிளறாமல், ஓளரவு
கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில்
எண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி மூடி
வைத்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து பணியாரத்தை திருப்பி போட்டு, 2 நிமிடம் மீண்டும்
வேக வைத்து எடுத்தால், சுவையான பலாப்பழ பணியாரம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications