Just In
- 10 hrs ago
மைதா போண்டா
- 10 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
- 11 hrs ago
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
Don't Miss
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் செய்வதற்கு பொருட்களை வாங்க ஆரம்பித்திருப்பார்கள். சிலர் பாரம்பரிய முறையில் வீட்டிற்கு வெளியே மண்பானையில் பொங்கலை வைப்பார்கள். ஆனால் நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு அப்படியான சூழ்நிலை இல்லாததால், குக்கரில் பொங்கலை வைப்பார்கள். நீங்களும் குக்கரில் பொங்கல் வைப்பவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் பொதுவாக ஐயங்கார் சமையல் மிகவும் ருசியாக இருக்கும்.
அதிலும் அவர்கள் செய்யும் பொங்கல் அட்டகாசமாக இருக்கும். அந்த மாதிரியான பொங்கலை செய்ய வேண்டுமானால், கீழே ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, பொங்கல் அன்று செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/2 கப்
* பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கொதிக்க வைத்த பால் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* வெல்லம் - ஒரு கப் (பொடியாக தட்டியது)
* தண்ணீர் - 1/2 கப் (வெல்லத்தை பாகுவாக்க)
* நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப்பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
* பின் அதில் பச்சரிசியை சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வறுத்து, இறக்கிக் கொள்ளவும். பின்பு அதை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கழுவிய அரிசியுடன் பால் மற்றும் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதில் கொதிக்க வைத்துள்ள பால் அல்லது நீரை வேண்டுமானால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி, பாகு தயாரித்துக் கொள்ளவும்.
* பின் அந்த பாகுவை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், இந்நிலையில் சூடான பால் அல்லது நீரை ஊற்றி, அடிபிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிவிடுங்கள்.
* இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்த்து , அதன் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்.
IMAGE COURTESY: chitrasfoodbook