Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும்
Iyengar Style Murungakkai Rasam Recipe in Tamil: மதிய வேளையில் தினமும் ஒரே மாதிரியாக சமைத்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழம்பு, ரசம் என்று தனித்தனியாக சமைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் முருங்கைக்காயை வைத்து ஐயங்கார் ஸ்டைலில் வித்தியாசமான ரசம் வையுங்கள். அதுவும் இந்த ரசத்தை துவரம் பருப்பு சேர்த்து செய்யும் போது, அதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் இப்படி ஒருமுறை ரசம் வைத்தால், பின் அடிக்கடி இப்படி தான் ரசம் வைப்பீர்கள்.

முருங்கைக்காயை வைத்து பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு அல்லது பொரியல் போன்றவற்றத்தைத்தான் செய்வோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து சூப்பரான ரசம் கூட வைக்கலாம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த முருங்கைக்காய் ரசம் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு இந்த சுவையான ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் அளவு புளி
- முருங்கைக்காய் - 3
- துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
ரசப்பொடி செய்யத் தேவையானவை:
- 1 ஸ்பூன் நெய்
- 2 ஸ்பூன் மல்லி விதைகள்
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 1 வர மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் கடுகு
- 1 தக்காளி
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
- முருங்கைக்காயைக் கழுவி, 2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
- முருங்கைக்காய் துண்டுகளில் பாதியை துவரம்பருப்புடன் சேர்த்து, குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- குக்கரில் அழுத்தம் குறைந்ததும், பருப்பை நன்றாக மசித்துக்கொள்ளவும். மேலும், ஒரு கரண்டியைப் பயன்படுத்தி முருங்கைக்காயின் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இவற்றைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் நெய் ஊற்றவும். சீரகத்தைத் தவிர, அரைப்பதற்கான மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வறுத்த பொருட்களை அடுப்பிலிருந்து எடுத்து, மிக்ஸி ஜாரில் போடவும்; அதனுடன் சீரகத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
- இதை நைஸான பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். அதில் முருங்கைக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். புளிக்கரைசல் கொதிக்கத் தொடங்கும்போது, வேகவைத்த முருங்கைக்காய் சதைப்பகுதியைச் சேர்க்கவும்.
- புளியின் பச்சை வாசனை போகும் வரை ரசத்தைக் கொதிக்கவிடவும்.
- வேகவைத்து மசித்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப 2 கப் தண்ணீர் சேர்த்து ரசத்தின் பதத்தை சரிசெய்து கொள்ளவும். மிதமான தீயில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக அரைத்த ரசப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். ரசத்தின் மேல் நுரை வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- ஒரு சிறிய கடாயை சூடாக்கி, அதில் நெய் ஊற்றி கடுகு சேர்க்கவும். கடுகு பொரியத் தொடங்கியதும், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்கவும். பின், இதை ரசத்தில் சேர்க்கவும்.
- இதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி, சாதத்துடன் சூடாகப் பரிமாறவும். சுவையான மற்றும் காரமான ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications
