Latest Updates
-
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்..
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
Iyengar Style Anjaraipetti Kuzhambu Recipe in Tamil: பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இந்த அஞ்சறைப் பெட்டி குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிறிய எலுமிச்சை அளவு புளி
- 2 முருங்கைக்காய்
- 4 கத்தரிக்காய்
- தேவையான அளவு உப்பு
அரைக்க வேண்டியவை:
- 1 ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் பாசிப் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 ஸ்பூன் மல்லி விதை
- ½ ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் பச்சரிசி
- 1 ஸ்பூன் மிளகு
- 5 வர மிளகாய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- புளியை சூடான நீரில் ஊறவைத்து, அதன் சாற்றைப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் பச்சரிசி மற்றும் வெந்தயத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைப்பதற்குத் தேவையான மற்ற பொருட்களைச் சேர்த்து, ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு, இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு, நைசான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும், அதை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் நீளமாக கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- இப்போது புளிக் கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காய்கறிகளை புளிக் கரைசலுடன் சேர்த்து நன்கு கலந்து, குழம்பை 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இப்போது அரைத்து வைத்துள்ள குழம்புப் பொடியைச் சேர்த்து, கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறவும்.
- பின்னர் குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications