Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
1 துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி குழம்பு வையுங்க... ஒரு வாரம் வைச்சு சாப்பிடலாம்...டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Inji Kulambu Recipe in Tamil: இஞ்சி பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உணவிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனால்தான் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சி முக்கிய அங்கமாக உள்ளது. இஞ்சியை நாம் குழம்பு வகைகள், பிரியாணி மற்றும் சட்னி வகைகளில் சிறிய அளவில் பயன்படுத்தி வருகிறோம்.
இஞ்சியை உணவில் அதிகளவில் சேர்த்தால் அது உணவின் சுவையை கெடுத்துவிடும், ஆனால் இஞ்சியை வைத்தே ஒரு சூப்பரான குழம்பு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இஞ்சியை வைத்து சூப்பரான குழம்பு செய்யலாம். இந்த இஞ்சி குழம்பு சுவையானதாக இருப்பதுடன் நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமலும் இருக்கும். இது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். இந்த பதிவில் இஞ்சியை வைத்து எப்படி சூப்பரான குழம்பு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
- இஞ்சி - 2 இன்ச்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் ஒரு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1/4 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு -10 பல்
- தக்காளி -1
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - சிறிய துண்டு
செய்முறை:
- முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை அதில் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
- பின்னர் மீதமிருக்கும் எண்ணெயில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனுடன் ஒரு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- தேங்காய் நன்றாக வதங்கியதும் வதக்கி வைத்திருக்கும் இஞ்சியையும் அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி அதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த இஞ்சி தேங்காய் ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்பொழுது கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் எண்ணையை ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம், சீரகம், கடுகு மற்றும் உளுந்து இவற்றை சேர்த்து தாளிக்கவேண்டும்.
- பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக கறிவேப்பிலையும் சேர்த்து வெங்காயமும் பூண்டும் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாக மாறியதும் இதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் அளவிற்கு வதக்க வேண்டும்.
- எண்ணெய் பிரிந்த பிறகு புளியை நன்றாக கரைத்து இதனுடன் சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கலக்க வேண்டும்.
- பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்றாக பிரிந்து மேலே மிதக்க ஆரம்பித்ததும் இதில் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
- மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இஞ்சி குழம்பு தயாராகி விட்டது. இதை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications