Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நைட் குழந்தைகளுக்கு இந்த மாதிரி மக்ரோனி செஞ்சு குடுங்க... ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க...
Indian Style Macaroni Recipe In Tamil: நைட் டின்னருக்கு உங்கள் குழந்தைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அந்த பாஸ்தாவை செய்து கொடுங்கள். ஆனால் உங்களுக்கு பாஸ்தா சரியான சுவையில் உங்களுக்கு செய்ய வராதா?
எப்போது செய்தாலும் ஏதாவது சொதப்புவீர்களா? அப்படியானால் இன்று இந்தியன் ஸ்டைலில் பாஸ்தாவை செய்து கொடுங்கள். இந்த பாஸ்தாவிற்கு ஸ்பெஷல் பொருட்கள் எதுவும் தேவையில்லை. வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது.

உங்களுக்கு இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மக்ரோனி பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மக்ரோனி பாஸ்தா - 1 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயத் தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைக்க தேவையான அளவு நீரை
ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மக்ரோனி பாஸ்தாவை
சேர்த்து, சிறிது உப்பு தூவி, மக்ரோனி முக்கால்வாசி வெந்ததும்,
அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில்
ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, குறைவான தீயில் வைத்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி,
மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்த நன்கு
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி கெட்சப்பை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின்
வெங்காயத் தாளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள மக்ரோனி பாஸ்தாவை சேர்த்து நன்கு மசாலா
பாஸ்தாவுடன் சேரும் வகையில் கிளறி விட்டு இறக்கினால், சுவையான
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா தயார்.



Click it and Unblock the Notifications