Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ரமலான் நோன்பு முடிக்கும் போது சிக்கனை வெச்சு இப்படி ஒரு டைம் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Iftar Special Chicken Cone Recipe In Tamil: தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டு வருகிறார்கள். சூரிய உதயத்தில் நோன்பை திறந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பை முடிப்பதால், மாலை வேளையில் சுவையான, அதே சமயம் சத்தான சிக்கன், மட்டன் ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவார்கள்.
குறிப்பாக எளிதில் செய்யக்கூடியவாறான ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவார்கள். நீங்களும் அப்படி விரும்புகிறீர்கள் என்றால், இன்று சிக்கன் கோனை ட்ரை செய்யுங்கள். இந்த சிக்கன் கோன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கோன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கோன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* சேமியா - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் 65 மசாலா - 1/4 டீஸ்பூன்
* மல்லித்தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மொசரெல்லா சீஸ் - 1/2 கப்
* மயோனைஸ் - 2 டீஸ்பூன்
ஷீட் செய்வதற்கு...
* மைதா - 1 கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
எண்ணெய் சேர்த்து கையால் நன்கு கிளறி விட வேண்டும். பின் தேவையான அளவு
நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், தந்தூரி மசாலா, கரம் மசாலா, மஞ்சள்
தூள், சாட் மசாலா, சிக்கன் 65 மசாலா, மல்லித் தூள், சோம்புத் தூள்,
மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3 நிமிடம் நன்கு
கிளறி விட வேண்டும்.
* பிறகு எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை
வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நீர்
எதுவும் சேர்க்காதீர்கள்.
* குறைவான தீயில் வைத்து சிக்கனை ஒரு 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து மொசரெல்லா சீஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை
நன்கு கிளறி விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது
உள்ளே வைக்கும் ஸ்டப் தயார்.
* அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து மைதா மாவில் பிரட்டி, வட்டமாக நன்கு
மெல்லிசாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தேய்த்த ஒரு மாவை எடுத்து, அதை அரை வட்டமாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பௌலில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நீரை ஊற்றி,
மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாத மைதா பேஸ்ட்டை தயார்
செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் ஒரு தட்டில் சேமியாவை எடுத்து அரை
நொறுக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வெட்டிய ஒரு அரை வட்டத் துண்டை எடுத்து, அதன் நடுவே லேசாக
மைதா பேஸ்ட்டை தடவி, கோன் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். விரிசல்
உள்ள இடத்தில் மைதா பேஸ்ட்டை தடவி இடைவெளி இல்லாதவாறு ஒட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதனுள் சிக்கன் கலவையை வைத்து நிரப்பி, முதலில் மைதா
பேஸ்ட்டில் நனைத்து எடுத்து, பின் சேமியாவில் பிரட்டி எடுத்து ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, செய்து
வைத்துள்ள கோனில் 2 துண்டுகளை போட்டு, உடனே கரண்டியால் திருப்பிப்
போடாமல், ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு, அனைத்து பக்கமும்
பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து
கோனையும் பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் கோன் தயார்.
Image Courtesy: Pinterest



Click it and Unblock the Notifications