Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இட்லிக்கு 10 நிமிஷத்துல இப்படியொரு குழம்பு செய்யுங்க... 2 இட்லி எக்ஸ்டரா சாப்பிடுவாங்க..
Idly Kuzhambu Recipe In Tamil: காலையில் வீட்டில் செய்யும் இட்லிக்கு எப்போதும் சட்னி செய்யாமல், ஒருமுறை அதற்கு குழம்பு செய்யுங்கள். இந்த இட்லி குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்ட விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த குழம்பு குக்கரில் செய்தால், 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான இட்லி குழம்பு தயார்.
உங்களுக்கு இட்லி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைஎ படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* நன்கு கனிந்த தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 6-8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 2
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, துருவிய
தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை
மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான இட்லி குழம்பு
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications