Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
1 கப் புளிச்ச இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த போண்டாவை செய்யுங்க.. காபி, டீயுடன் சாப்பிட டக்கரா இருக்கும்..
Idli Maavu Kara Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் கடலை மாவு வெச்சு பஜ்ஜி, வடை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் புளிச்ச இட்லி மாவு இருக்குதா?
அப்படியானால் அந்த இட்லி மாவைக் கொண்டு மாலை வேளையில் நல்ல மொறுமொறுப்பான போண்டாவை செய்யுங்கள். இந்த இட்லி மாவு கார போண்டாவிற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. வெறுமனே சாப்பிடும் அளவிற்கு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த போண்டாவை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு மொறுமொறுப்பான இட்லி மாவு கார போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளித்த இட்லி மாவு - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* பூண்டு - 3 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை -1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, வரமிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஊற வைத்த மாவுடன், அரைத்த வரமிளகாய் விழுதை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி
மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம்
கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
இட்லி மாவு கார போண்டா தயார்.



Click it and Unblock the Notifications