Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இட்லிக்கு 10 நிமிடத்தில் இப்படியொரு குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு போல ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Idli Kuzhambu Recipe In Tamil: காலையில் இட்லிக்கு சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? சமையலறையில் நீண்ட நேரம் இருக்காமல் 10 நிமிடத்தில் ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இட்லி குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு இட்லியுடன் மட்டுமின்றி, சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
முக்கியமாக இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த குழம்பை செய்யலாம். அந்த அளவில் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது.

ஒருமுறை இந்த குழம்பை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். குறிப்பாக இட்லி சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுத்தால், கணக்கில்லாமல் இட்லியை சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த இட்லி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 4
* பூண்டு - 6-8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4
* கசகசா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அத்துடன் துருவிய தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை,
முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள்,
கரம் மசாலா சேர்த்து கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி,
மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications