Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மணமணக்கும்... சுவையான... இடிச்ச நாட்டுக்கோழி ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Idicha Nattu Kozhi Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை வாங்கினால், அந்த நாட்டுக்கோழியைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று மட்டும் செய்யாமல், அத்துடன் இடிச்ச நாட்டுக்கோழி ரசத்தையும் செய்யுங்கள்.
சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த நாட்டுக்கோழி ரசத்தை செய்து சாப்பிட்டால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த நாட்டுக்கோழி ரசத்தை செய்வது மிகவும் சுலபம். இதை சாதத்துடன் சாப்பிடலாம் அல்லது வெறுமனே சூப் போன்றும் குடிக்கலாம்.

உங்களுக்கு இடிச்ச நாட்டுக்கோழி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இடிச்ச நாட்டுக்கோழி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி கால் - 100 கிராம்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 7
* பூண்டு - 5 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் நாட்டுக்கோழியின் காலை சுத்தம் செய்து, அம்மி கல்லில்
போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அம்மிக் கல்லில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம்,
சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை வைத்து தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை கைகளால் பிசைந்து சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள நாட்டுக்கோழி காலை சேர்த்து நன்கு 3-4
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில்
வைத்து, அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான இடிச்ச நாட்டுக்கோழி ரசம் தயார்.



Click it and Unblock the Notifications