Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஹைதராபாத் ஸ்டைலில் ஒருவாட்டி முட்டை கறி செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்...
Hyderabadi Egg Malai Curry Recipe In Tamil: நைட் நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி முட்டை சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் எப்போதும் ஒரே சுவையில் முட்டை சைடு டிஷ் செய்யாமல், ஒருமுறை ஹைதராபாதி ஸ்டைல் முட்டை மலாய் கறியை செய்யுங்கள்.
இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், பூரி போன்றவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை கறி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த முட்டை கறியை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

உங்களுக்கு ஹைதராபாதி முட்டை மலாய் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி முட்டை மலாய் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி - 1 பெரிய துண்டு
* பூண்டு - 5 பல்
* கொத்தமல்லி - 1 கப்
* புதினா - 1 கப்
கிரேவிக்கு..
* முட்டை - 8
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தயிர் - 100 மிலி
* தண்ணீர் - 1 கப்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை போட்டு, நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து, 20 நிமிடம் முட்டைகளை வேக
வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் முட்டைகளை குளிர வைத்து, அதன் ஓட்டினை அகற்ற வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,
கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி
வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள்,
சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம்
பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து,
பின் அதில் வேக வைத்த முட்டைகளை எடுத்து அதில் ஆங்காங்கு கத்தியால்
கீறி விட்டு சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லி மற்றும்
பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஹைதராபாதி முட்டை
மலாய் கறி தயார்.



Click it and Unblock the Notifications











