Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த சன்டே சிக்கனை இந்த மாதிரி வறுவல் செஞ்சு கொடுங்க... செஞ்ச உங்களுக்கே கிடைக்காது...
Hyderabadi Chicken Fry Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? இந்த சிக்கனை எப்போதும் ஒரே சுவையில் தான் வறுவல், கிரேவி என்று செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் ஆந்திராவில் உள்ள ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் வறுவல் செய்யுங்கள்.
இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சிக்கன் வறுவலை செய்தால், செய்த உங்களுக்கே கிடைக்காத அளவில், வீட்டில் உள்ளோர் காலி செய்துவிடுவார்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாதி சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் வெட்டியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - பாதி
வறுவலுக்கு...
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பட்டை - 2 துண்டு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக ப்ரை
செய்து அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட், புளிப்பில்லாத தயிர், நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு
தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் பாதி எலுமிச்சையை பிழிந்து விட வேண்டும்.
* பின் அதை கைகளால் நன்கு பிசைந்துவிட்டு, பின்பு அதில் ப்ரை செய்து
வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 1/2
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம் வறுத்த எண்ணெய் வாணலியை அப்படியே அடுப்பில் வைத்து,
எண்ணெய் அதிகமாக இருந்தால் கொஞ்சம் எடுத்து விட்டு, பின் மீதமுள்ள
எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிக்கனின்
நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் சிக்கனை மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் சிறிது நேரம் வேக
வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து சிக்கனை நன்கு கிளறி விட
வேண்டும். உங்களுக்கு கிரேவி மாதிரி வேண்டுமானால், சிறிது நீரை
ஊற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீர் ஊற்றாமல் அப்படியே கிளறி,
மூடி வைத்து, 10-15 நிமிடம் மூடி வைத்து, அவ்வப்போது கிளறி விட்டு
எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான ஹைதராபாதி சிக்கன் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications