Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Hyderabad Rottu Kadai Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னியை செய்தால், தொட்டு சாப்பிடாமல் அள்ளி ஊற்றி பிசைந்து சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். அதுவும் மழை நேரத்தில் இந்த சட்னியை செய்தால், சற்று காரமாகவும் வாய்க்கு ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* வேர்க்கடலை - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி
மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
அத்துடன் 1/2 கப் வேர்க்கடலை, 1/2 கப் பொட்டுக்கடலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சற்று அதிகமாக
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications