For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குனேஸ் கொஜூ ரெசிபி /கர்நாடக ஸ்டைல் புளிக்கறி/டர்மரைன்டு கொஜூ ரெசிபி

குனேஸ் கொஜூ கர்நாடக ஸ்டைல் ரெசிபி ஆகும். இது சைடிஸ் ஆக தயாரிக்கப்படும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை செய்முறைகள் மற்றும் வீடியோ தொகுப்பு மூலம் காணலாம்.

Posted By: R. SUGANTHI Rajalingam
|

குனேஸ் கொஜூ கர்நாடக ஸ்டைல் ரெசிபி ஆகும். இது சைடிஸ் ஆக தயாரிக்கப்படும் ரெசிபி ஆகும். இந்த கர்நாடக ஸ்டைல் புளிக்கறி என்பது புளிக்கரைசல் ஜூஸையும், வெல்லம் மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் ரெசிபி ஆகும்.

இந்த டர்மரைன்ட் கொஜூ அதன் புளிப்பு மற்றும் காரசாரமான சுவை யால் எல்லாருக்கும் பிடித்தமான ரெசிபி ஆகும். இந்த இரண்டு சுவையும் உங்கள் நாவின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் விருந்தளிக்கும். இந்த குனேஸ் கொஜூ ரெசிபி பொங்கல் மற்றும் சூடான சாதத்துடன் வைத்து பரிமாறுவர். கண்டிப்பாக இந்த குனேஸ் கொஜூவை பொங்கலுடன் சேர்த்து தட்டில் சாப்பிடும் போது உங்கள் தட்டை ஒட்டுமொத்தமாக காலி செய்து விடுவீர்கள்.

புளியின் புளிப்பு சுவையும், பச்சை மிளகாயின் கார சுவையும் அப்படியே வெல்லத்தின் இனிப்பு சுவையும் உங்க நாவின் நரம்புகள் ஒவ்வொன்றையும் சொட்டை போட வைத்து விடும். இந்த புளிப்பான இனிப்புடன் கூடிய கொஜூவை செய்வது மிகவும் எளிதாக இருப்பதோடு விரைவாகவும் செய்து விடலாம்.

உங்கள் முக்கிய உணவிற்கு சைடிஸான இந்த டர்மரைன்ட் கொஜூ ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் இங்கே காணலாம்.

குனேஸ் கொஜூ ரெசிபி வீடியோ

குனேஸ் கொஜூ ரெசிபி
குனேஸ் கொஜூ ரெசிபி /கர்நாடக ஸ்டைல் புளிக்கறி/டர்மரைன்டு கொஜூ ரெசிபி /இனிப்பு மற்றும் புளிப்புடன் கூடிய புளிக்கறி ரெசிபி
Prep Time
20 நிமிடங்கள்
Cook Time
20 நிமிடங்கள்
Total Time
50 நிமிடங்கள்

Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: சைடிஸ்

Serves: 4 பேர்கள்

Ingredients
  • புளி - 1 லெமன் வடிவ அளவிற்கு

    தண்ணீர் - 11/2 கப்

    எண்ணெய் - 11/2 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1/4 கப்

    கறிவேப்பிலை - 10-15

    பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - 1/2 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    துருவிய தேங்காய் - 1/4 கப்

    கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 1/2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. புளியை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

    2. அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

    3. நன்றாக பிழிந்து விட்டால் ஈஸியாக ஜூஸ் எடுக்கலாம்

    4. 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்

    5. இப்பொழுது நன்றாக பிசைந்து புளி ஜூஸை மட்டும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

    7. கடுகை போட்டு வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

    8. இப்பொழுது அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்

    9. நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போன்றவற்றை சேர்க்க வேண்டும்

    10. பெருங்காயத்தை புளி ஜூஸில் சேர்க்க வேண்டும்

    11. ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்

    12. மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

    13. இப்பொழுது வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும்

    14. தேங்காய் துருவல் போட்டு மற்றும் உப்பு சேர்க்கவும்.

    15. நன்றாக கிளறி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

    16. நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.

    17. இதை ஒரு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்.

Instructions
  • 1.ரெடிமேட் புளிக்கரைசலும் நாம் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
  • 2.உடனடியாக புளிக்கரைசல் தயாரிக்க வெந்நீர் ஊற்றி புளியை பிசைந்து எடுத்தால் போதும். ஊற வைக்க வேண்டிய தேவை இருக்காது.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 2 டேபிள் ஸ்பூன்
  • கலோரிகள் - 120
  • கொழுப்பு - 1.6 கிராம்
  • புரோட்டீன் - 5.1 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 31 கிராம்
  • சுகர் - 19 கிராம்
  • நார்ச்சத்து - 1 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் : குனேஸ் கொஜூ ரெசிபி செய்வது எப்படி

1. புளியை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

2. அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

3. நன்றாக பிழிந்து விட்டால் ஈஸியாக ஜூஸ் எடுக்கலாம்

4. 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்

5. இப்பொழுது நன்றாக பிசைந்து புளி ஜூஸை மட்டும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

7. கடுகை போட்டு வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

8. இப்பொழுது அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்

9. நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போன்றவற்றை சேர்க்க வேண்டும்

10. பெருங்காயத்தை புளி ஜூஸில் சேர்க்க வேண்டும்

11. ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்

12. மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

13. இப்பொழுது வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும்

14. தேங்காய் துருவல் போட்டு மற்றும் உப்பு சேர்க்கவும்.

15. நன்றாக கிளறி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

16. நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்கவும்.

17. இதை ஒரு பெளலிற்கு மாற்றி சூடாக பரிமாறவும்.

[ 4.5 of 5 - 125 Users]
English summary

குனேஸ் கொஜூ ரெசிபி /கர்நாடக ஸ்டைல் புளிக்கறி/டர்மரைன்டு கொஜூ ரெசிபி /இனிப்பு மற்றும் புளிப்புடன் கூடிய புளிக்கறி ரெசிபி

Hunase gojju is a typical Karnataka-style recipe that is popularly prepared as a side dish. The Karnataka-style tamarind curry is made by cooking tamarind juice and jaggery with spices added to it.
Story first published: Wednesday, September 20, 2017, 11:40 [IST]
Desktop Bottom Promotion