Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சண்டே ஸ்பெஷல்: கல்யாண பந்தியில் வைக்கப்படும் சுவையான பெப்பர் சிக்கனை வீட்டிலேயே செஞ்சு அசத்துங்க...!
Pepper Chicken: சண்டே வந்தாலே எல்லாரின் நினைவிற்கு முதலில் வருவது அசைவ உணவுதான். சொல்லப்போனால் சிலருக்கு சண்டே வருவதே அசைவம் சாப்பிடத்தான். மட்டனின் விலை மற்றும் அதன் கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் சிக்கனை நோக்கித்தான் படையெடுக்கின்றனர்.
சிக்கன் மீதான மக்களின் இந்த தீரா காதலுக்கு அதன் விலை மற்றும் சுவை காரணமாக இருந்தாலும் அது சமைக்க மிகவும் எளிதானது என்பது முக்கியக் காரணமாகும். தற்போது விஷேஷ வீடுகள் மட்டுமின்றி பல பிரபல உணவகங்களிலும் கல்யாண விருந்து என்று அசைவ உணவுகளை அன்லிமிடெட்-ஆக கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

கல்யாண பந்தி ஸ்டைலில் பரிமாறப்படும் உணவுகளில் பிரியாணி எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதேபோல அதனுடன் வைக்கப்படும் சுவையான பெப்பர் சிக்கனும் முக்கியமாகும். மசாலா தூக்கலாக பஞ்சு போல வெந்திருக்கும் இந்த சிக்கன் வறுவலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த அருமையான கல்யாண ஸ்டைல் பேப்பர் சிக்கன் செய்வது அவ்வளவு கடினமானது அல்ல. இந்த சுவையான பெப்பர் சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
ஏலக்காய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 2
தயிர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயத்தை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை போட்டு தாளிக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தையும், கருவேப்பிலையையும் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், அதன்பின் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- பச்சை வாசனை போனவுடன் கழுவி வைத்த சிக்கனை போட்டு சிறிது வதக்கவும், அதன்பின்னர் அரைத்த தக்காளி மற்றும் தயிரை சேர்த்து சிக்கனை வதக்கவும்.
- சிக்கன் ஓரளவு வெந்தவுடன் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் 1 ஸ்பூன் மிளகுதூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி விட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும்.
- இடையிடையே பாத்திரத்தைத் திறந்து சிக்கனை நன்கு கிளறிவிடவும். சிக்கன் நன்கு வெந்து தொக்கு பதத்திற்கு வந்ததும் 2 ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கொஞ்சம் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறவும்.
- 2 நிமிடத்திற்கு சிறிது கொத்தமல்லி சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- இப்போது சுவையான கல்யாண ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார். பிரியாணி, சாதம் மற்றும் புரோட்டோவிற்கு இது சிறந்த சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications